மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர்  நடிகரும் இயக்குநருமான கே. நட்ராஜின் மகள் ரஜினியை  கடந்த 2011ம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2017ம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தான். 

 

இந்நிலையில் விஷ்ணு விஷால்  தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் ரஜினியும் (அவரது மனைவி) கடந்த ஓராண்டாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எங்களுக்கு மகன் இருக்கிறான். அவனை சேர்ந்து வளர்ப்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். இனியும் நாங்கள் நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து வாழ்வோம் .எங்களது குழந்தை மற்றும் குடும்பத்திற்காக எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.