மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற சினிமா இயக்குநர்: கேஷுவலாக அளித்த வாக்குமூலம் இது தான்!

 

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற சினிமா இயக்குநர்: கேஷுவலாக அளித்த வாக்குமூலம் இது தான்!

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியா என்ற பெண்ணின் கை, கால்கள் தொடர்புடைய வழக்கில்,  அவரது கணவன் பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

சென்னை : பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியா என்ற பெண்ணை கொன்ற வழக்கில் வழக்கில்,  அவரது கணவன் பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சந்தியாவுக்கும் , அவரது கணவரும் இயக்குநருமான பாலகிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்துகோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பாலகிருஷ்ணன், கடந்த 2010ஆம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். 

murder

மனைவின் நடத்தையில் சந்தேகித்த பாலகிருஷ்ணன், அவருடன் பலமுறை வாக்குவாதம் செய்துள்ளார். இதை தொடர்ந்து  சென்னை வந்த சந்தியா, ஹாஸ்டலில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பாலகிருஷ்ணன் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சந்தியாவை, ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். சந்தியா, அவரின் அழைப்பை ஏற்று வீட்டிற்குச் சென்றுள்ளார்.  சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதிளித்த பாலகிருஷ்ணன், தன்னோடு சேர்ந்துவாழவேண்டுமென கூறியுள்ளார். இதனால் கடந்த 19-ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து வீட்டை விட்டு வெளியேற சந்தியா முயற்சித்திருக்கிறார். 

balakrrishan

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன்  சுத்தியலால், சந்தியாவின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அன்றிரவு பிணத்துடன் பொழுதை கழித்த பாலகிருஷ்ணன்  20-ஆம் தேதி குடித்துவிட்டு வந்து சந்தியாவின் உடலை துண்டுதுண்டாக கூறுபோட்டு,  சாக்குப்பைகளில் கட்டி, அதனை வீட்டின் அருகேயே உள்ள குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரையோரமும் வீசியுள்ளார்.

murder

இந்நிலையில், ஜனவரி 21-ஆம் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் கை,கால்கள் கண்டெடுக்கப்பட்டதால் கொலை சம்பவம்  குறித்த தகவல் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. இதுவரை சந்தியாவின் உடல்பாகங்களை ஒவ்வொன்றாக போலீசார் கண்டெடுத்து வரும் நிலையில், தற்போது தலையை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வருகின்றனர்.  பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தன் மனைவியை கொலை செய்து விட்டோம் என்ற குற்றவுணர்வு கொஞ்சம் கூட இல்லாமல்  சாதாரணமாக போலீசாரிடம் பாலகிருஷ்ணன்  கொலை செய்ததை  வாக்குமூலமாக கொடுத்தாக கூறப்படுகிறது. முன்னதாக தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மனைவியை காணவில்லை என்று புகார் அளித்து தானே வந்து போலீசாரிடம் சிக்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.