மனைவியுடன் பைக்கில் சென்ற இயக்குநர் விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

 

மனைவியுடன் பைக்கில் சென்ற இயக்குநர் விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அதை மோதாமல் இருக்க வண்டியை திருப்பியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில்  உயிருக்கு  போராடி வந்த   இளம் இயக்குநர் விவேக் ஆர்யன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 30.

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விவேக் ஆர்யன்.  இதை  தொடர்ந்து பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் கடந்தாண்டு வெளியான  ஒருமையில் ஒரு சிஷ்ரம் படத்தின் மூலம் இயக்குநரானார். 

ttn

இவர் டிசம்பர் 22-ம் தேதி தனது மனைவி அமிர்தாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே ஒரு நாய் வர , அதை மோதாமல் இருக்க வண்டியை திருப்பியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். 

இதையடுத்து  கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விவேக் ஆர்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். 

ttn

இந்நிலையில் விவேக் ஆர்யன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். விவேக் ஆர்யனின் இழப்பு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.