மனைவியின் மாதவிடாய் காலத்தில் இப்படி நடந்துக் கொள்ளுங்கள்: கணவன்மார்களுக்கு அட்வைஸ்

 

மனைவியின் மாதவிடாய் காலத்தில் இப்படி நடந்துக் கொள்ளுங்கள்: கணவன்மார்களுக்கு அட்வைஸ்

பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இது போன்ற நாட்களில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதால் அவர்கள் வீட்டில் சேர்க்கப்படாமல் தனியறையில் வைத்தனர்.

பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இது போன்ற நாட்களில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதால் அவர்கள் வீட்டில் சேர்க்கப்படாமல் தனியறையில் வைத்தனர்.

மாதவிடாயின் போது பெண்களுக்கு உடல் மற்றும் மன சோர்வு இருக்கும் என்பதால், அவர்களிடம் இருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக கோபம் வெளிப்படும். திருமணமான ஆண்கள் தங்களது மனைவியை அவர்களது மாதவிடாய் நாட்களில் அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்று.

பெண்களின் வலி அறிந்து நடந்து கொள்ளும் போது அவர்களது மனதை எளிதில் கவர்ந்து அன்பை பெற முடியும். பெண்களின் மாதவிடாய் நேரத்தில் கணவன்மார்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

women

மாதவிடாயின் போது பெண்களின் வேலைப்பளுவை குறைக்க உதவுங்கள். உடலில் வலி இருக்கும் போது வேலை செய்தால் அவர்கள் பலவீனமாவார்கள். அதனால் அந்த நாட்களில் கண்டிப்பாக உடலுக்கு ஓய்வு வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் பெண்களின் உணவு முறை மாறும், ருசியான உணவை அவர்கள் விரும்புவதால் அவர்களுக்கு பிடித்ததை கொடுங்கள். வயிற்று வலி இருப்பதால் முதுகுக்கு வெதுவெதுப்பான நீரைக்கொண்டு டவல் வைத்து ஒத்தடம் கொடுங்கள், மசாஜ் செய்துவிடுங்கள். கால் வலி இருக்குமானால் ஈகோ பார்க்காமல் மென்மையாக காலைப் பிடித்துவிடுங்கள்.

5 நாட்கள் வரை வலியால் அவதிப்படும் பெண்களுக்கு, செக்ஸ் குறித்த உணர்வு இருப்பதில்லை. அதனால், இந்த நாட்களில் செக்ஸ் குறித்த உங்களின் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் நாட்களில் உங்களது பார்ட்னரை அன்பாக பார்த்துக் கொண்டு ஹாப்பியாக வைத்திருங்கள்.