மனைவியின் நிர்வாண புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்ட கணவர்; அதிர்ச்சி தகவல்!

 

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்ட கணவர்; அதிர்ச்சி தகவல்!

மனைவியின் நிர்வாண புகைப்படத்தை ஆன்லைனில் கணவரே பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு: மனைவியின் நிர்வாண புகைப்படத்தை ஆன்லைனில் கணவரே பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்துக்கு பெண் வீட்டார் சுமார் ரூ.30 லட்சம் செலவு செய்துள்ளனர். பல்வேறு கனவுகளுடன் திருமண பந்தத்துக்குள் நுழைந்த அப்பெண்ணுக்கு முதல் நாள் இரவே அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண்ணின் கணவர் ஆண்மை குறைவு உள்ளவர் என்பது அன்றைய தினம் இரவில் அப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

இதனை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ள கணவர் வீட்டார், இதுகுறித்து அப்பெண்ணுக்கு தெரியவந்ததும், அவரை கொடுமை படுத்தியுள்ளனர். உச்சகட்டமாக, ஒருநாள் தனது இளைய சகோதரர் ஒருவருடனும், அவரது நண்பர் ஒருவருடனும் உடலுறவு கொள்ளுமாறு கணவர் அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

இதனால், அதிர்சியடைந்த அந்த பெண், இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், திருமணத்துக்கு முன்பே தனது கணவருக்கு ஆண்மை குறைவு இருந்ததற்கான மருத்துவ ஆதாரங்களையும் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து, தனது வாழ்க்கையை ஏன் சீரழித்தீர்கள் என கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, வேறு யாருடனும் நீ உடலுறவு வைத்துக் கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற அதிர்சிகர பதிலை அளித்துள்ளனர்.

மேலும், அவருக்கு ஆண்மை குறைவுக்கான இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அப்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். தனது தந்தையிடம் இருந்து பணத்தை பெற்று தர அவர் மறுப்பு தெரிவித்ததால், கணவர் வீட்டார் அப்பெண்ணை அடிமை போல நடத்தியுள்ளனர்.

இதனிடையே, திருமண பந்தத்தை முறித்து கொள்ள அப்பெண் நினைத்த போது, அவரை மயக்க நிலைக்கு ஆளாக்கி, நிர்வாணமாக சில புகைப்படங்களை கணவர் வீட்டார் எடுத்துள்ளனர். பின்னர், அப்பெண்ணின் ஃபேஸ்புக் கணக்கை ஹேக் செய்து பாலியல் தொழிலாளி என அவர்களே பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண்ணுக்கு தெரியவர, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், சைபர் பிரிவை தொடர்பு கொண்டு ஆன்லைனில் பதிவிடப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை நீக்கியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த விவகாரத்தில், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரிப்பதே எங்களது முக்கிய நோக்கம். ஆன்லைனில் பதிவிடப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை முதலில் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.