மனித வெடிகுண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?

 

மனித வெடிகுண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?

மனித வெடிகுண்டுகளை அடையாளம் காண்பது எளிது! தவிர,அவர்கள் தொழிலுக்கு புதியவர்கள்…அவர்களின் பதட்டமே அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.

மனித வெடிகுண்டுகளை அடையாளம் காண்பது எளிது! தவிர,அவர்கள் தொழிலுக்கு புதியவர்கள்…அவர்களின் பதட்டமே அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.உலகிலேயே மனித வெடிகுண்டுகளால்,அல்லது இலங்கையர் தமிழில் சொல்வதானால் ‘குண்டுதாரி’களை அதிகம் எதிர் கொண்டவர்கள் இஸ்ரேலி ராணுவத்தினர்தான்.

லெபனான்,சிரியா,ஜோர்டான் என்கிற இந்த முக்கோண பகுதிதான் தற்கொலைப்படையின் பிறப்பிடம்.இஸ்ரேலியர்கள் போட்ட லிஸ்ட்டில் இருந்து சில புல்லட் பாய்ண்ட்களை  நீங்களும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.முதலில் அவர்கள் சூழலுக்கு பொறுத்தமான உடை அணிவது கடினம்.

human bomb

மூன்றடி நீளம் இரண்டடி அகலமுள்ள துணியை நீளவாக்கில் இரண்டாக மடக்கி அவர்கள் உடலைச்சுற்றி ஒரு பைபோல அமைத்து முதுகுப்பக்கம் தைத்துவிட்டு, அந்த பைக்குள்தான் டைனமைட்களை வைக்கப்படும்.பட்டனோ ஜிப்போ வைத்தால் கடைசிநேர பயத்துக்கு வழி ஏற்படுத்திவிடும். 

டைனமைட்டுகளோடு,சின்ன பால் பேரிங்குகள் ஆணிகள் போன்றவற்றை கூட இட்டு நிரப்புவதுண்டு.அப்புறம் மேல் பக்கத்திறப்பையும் தைத்து விடுவார்கள் எடையை தங்குவதற்கு வசதியாக தோள்பட்டையோடு இணைக்கும் பட்டிகளும் கையாலேயே தைக்கப்படும்.

bomb

இத்தனையையும் மறைக்க வேண்டுமென்பதால் கொஞ்சம் ஓவர் சைஸ் உடையே அணிந்திருப்பார்கள்.அவர்களது நடை கொஞ்சம் எந்திரன் போல இருக்கும்.சுமந்துகொண்டு இருக்கும் இருபது கிலோ எடையை காட்டிக்கொள்ளாமல் ‘கேஷுவலாக’ காட்டிக்கொள்ளும் முயற்சி அது.

தவிர பெரும்பாலான மனித வெடிகுண்டுகள் தாடையில் ஒப்பியம் போதை மருந்தை அடக்கிக்கொண்டு இருந்தது குண்டு வெடிப்புக்கு பிறகு கிடைத்த மனித வெடிகுண்டுகளின் தலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

human bomb

இது தவிர,அவர்கள் உடலில் அதீத வியர்வை பெருக்கு காணப்படும்.அதற்கு காரணம் உடலில் சுற்றப்பட்டு இருக்கும் வெடிமருந்து பைக்குள் வியர்த்து கொட்டும்.அதனால் ஏற்படும் பதற்றம்,வாழ்க்கையின் கடைசி நொடியில் இருக்கிறோம் என்கிற அச்சமும்,எப்படி வலிக்குமோ என்கிற பயமும்,  சொன்னபடியான வரவேற்பு சொர்கத்தில் தயாராக இருக்குமா,தேனும்,பாலும் ஓடும் ஆறுகளும்,அழகான கன்னிப்பெண்களும் இருப்பார்களா, தன் எதிர்காலம் குறித்து கனவுகண்ட பெற்றோர்கள் இந்த செய்தியைப்பார்த்ததும் என்ன நினைப்பார்கள் என்று என்னவெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும், இதெல்லாம் அவர்கள் முகத்தில் தெரியும்.

அடுத்தது அவர்களின் சுவாசம்,அது சீராக இருக்காது.அவர்கள் பயத்திலும் பதட்டத்திலும் மூச்சு விட மறந்துவிடக்கூடாது என்பதுபோல மூச்சை செயற்கையான முயற்சியுடன்,உள்ளே வெளியே என்று மூச்சை இழுப்பதும் வெளியேற்றுவதும் கவனமாக பார்த்தால் தெரியும்.அவர்களது பார்வை சுற்றிலும் நடக்கும் எதையும் கவனிக்காதது போல இருக்கும்.

bomb

இன்னும் சில நிமிடங்களில் தங்களால் கொல்லப்பட போகிறவர்களின் முகத்தைப் பார்க்க விரும்பாதது போல நேராக பார்த்தபடி நடப்பார்கள்.இதை பல கேமராகாட்சிகள் உறுதி செய்திருக்கின்றன.இவையெல்லாம்,எல்லா இனத்தவருக்கும் பொருத்தமானவையே! 

கடைசியாக இஸ்ரேலியர்கள் சொல்வது,சூசைட் பாமை கட்டிக்கொண்டு வருபவரின் முகத்தைபபார்த்தால் ,முகத்தின் மேல் பகுதியை விட வாய்க்கு கீழே இருக்கும் தாடை மோவாய் பகுதிகள் முகத்தின் மேல் பக்கத்தைவிட கொஞ்சம் கூடுதல் சிவப்பாக இருக்கும்.நீண்ட காலமாக வெய்யில் படாமல் தாடிக்குள் மறைந்திருந்ததால் இந்த கலர் வித்தியாசம் ஏற்படுகிறதாம்.
ஆனால்,இது பெண்களுக்கு பொருந்தாது. 

bomb

கூடவே,தமிழர்களுக்கோ,சிங்களவருக்கோ,வெள்ளையருக்கோ பொருந்தாது,என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.ஆகவே இனிவரும் காலத்தில் இதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.சந்தேகத்துக்கு இடமான காட்சி எதையாவது பார்த்தால் காவல் துறைக்குச் சொல்லுங்கள். இததைத்தான் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ நாடெங்கும் இப்படி எழுதி வைத்திருக்கிறது-If you see something,say something என்று!

இதையும் வாசிக்க: பர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்?!…