மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்!

 

மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்!

திருவாரூர் மாவட்டத்தில், கூத்தனூர் அருகே சிதிலபதியில் இருக்கிறது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மனித முகத்துடன் ஆதி விநாயகர் தனிச் சன்னதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  வழக்கமாக பிற ஆலயங்களில் வீற்றிருக்கும் யானை முகத்தைப் போல் அல்லாமல், மனித முகத்துடன் ஆதி விநாயகர் காட்சி அளிக்கும்

திருவாரூர் மாவட்டத்தில், கூத்தனூர் அருகே சிதிலபதியில் இருக்கிறது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மனித முகத்துடன் ஆதி விநாயகர் தனிச் சன்னதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  வழக்கமாக பிற ஆலயங்களில் வீற்றிருக்கும் யானை முகத்தைப் போல் அல்லாமல், மனித முகத்துடன் ஆதி விநாயகர் காட்சி அளிக்கும் இந்த தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய திசையில் பாய்கிறது.

lord vinayagar

இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள ஆலயங்கள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவையாக கருதப்படுகின்றன.  
ஆலயத்தின் முன் மனித முகத்துடன், நரமுக விநாயகராக, ஆதிவிநாயகராக மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகின்றார். வேறெந்த ஆலயத்திலும் இத்தகைய திவ்ய ஸ்ரூபத்தைக் காண இயலாது. ஸ்ரீ அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று இந்த ஆலயத்தில் ஸ்தூல, சூட்சும வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்ளையார் மூர்த்தி இவர் என்பது ஐதீகம். குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாயக மூர்த்தி இவர்.

lord vinayaga

குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல மூர்த்தியாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்.