மனித மிருகங்களை வேட்டையாடும் ஆர்யா: மிரட்டலாக வெளியானது மகாமுனி பட டீஸர்

 

மனித மிருகங்களை வேட்டையாடும் ஆர்யா: மிரட்டலாக வெளியானது மகாமுனி பட டீஸர்

ஆர்யா நடிப்பில் சாந்தகுமார் இயக்கியிருக்கும் `மகாமுனி’ படத்தின் டீசர் வெளியானது.

சென்னை: ஆர்யா நடிப்பில் சாந்தகுமார் இயக்கியிருக்கும் `மகாமுனி’ படத்தின் டீசர் வெளியானது.

மௌனகுரு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சாந்தகுமார். அப்படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். அப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் தற்போது 7ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார்.

magamuni

ஆர்யா ஹீரோவாக நடித்துத்திருக்க இந்துஜா, மாஸ்டர் ஜாசிக், மஹிமா நம்பியார், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ரோகிணி, பாலாசிங், அருள்தாஸ், காளி வெங்கட், தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘மகாமுனி‘ என்று பெயரிட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யா மூன்று வித்தியாசமான கெட்- அப்புகளில் நடித்துள்ளார். இந்துஜா அவரின் மனைவியாகவும், மஹிமா ஜர்னலிசம் பயிலும் மாணவியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. இதில் ஆர்யாவின் நடிப்பு பேசப்படும் விதமாக அமைந்துள்ளதால் கண்டிப்பாக ஆர்யாவிற்கு இப்படம் ஒரு நல்ல கம்பேக் ஆக அமையும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.