மனித நேயத்தை மறந்து போன நடிகர்கள் | நடிகர் அபி சரவணனின் ஆதங்கம்

மனித நேயத்தை மறந்து போன நடிகர்கள் | நடிகர் அபி சரவணனின் ஆதங்கம்

சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி பேச ஒரு மீடியா கிடையாது.. எல்லோரும் நடிகர் சங்கத் தேர்தலில் பிசியாக கடமையாற்றுகிறார்கள் என்கிற கூக்குரல் பொதுமக்களிடையே ஒலிக்கத் துவங்கிவிட்டது. இதற்கு மகுடம் வைத்தாற்போல முன்னணி தொலைக்காட்சிகளும், ரஜினி ஓட்டு போட வரலை… இந்த தடவையும் அஜித் வரமாட்டார்… என்று வராதவர்களின் லிஸ்ட் பட்டியலிட்டு நேரலை செய்து கொண்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்து விட்டு, உருக்கமான பதிவை முகநூலில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் அபி சரவணன். உருக்கமான பதிவு என்று சொல்வதை விட, ‘கட்டிடம் கட்டுவோம், நலித்த கலைஞர்களைக் காப்பாற்றுவோம்’ என்று வாய்கிழிய பிரச்சாரம் செய்த இரு அணிக்களுக்குமே இது சவுக்கடி தான். தேர்தல் திருவிழா இன்று மாலையோடு முடிந்து விட்டது. இனியாவது நிஜமாகவே ஜெயித்து வருபவர்கள், வயதான, நலித்த கலைஞர்களையும் வெறும் வாக்குக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கெளரவமான வாழ்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொண்டால் சந்தோஷம் தான். நடிகர் அபி சரவணனின் பதிவிலிருந்து…

dd

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்துவிட்டு திரும்பி வந்த நேரத்தில் தளபதி விஜய் சார் அவர்களும் வெளியே வர சரியான தள்ளுமுள்ளு. வயதான ஒருவர் மயங்கி கிடக்க, அருகே சென்று பார்த்தால் நடிகர் சங்க வாழ்நாள் உறுப்பினர் சேலம் சுந்தரம் ஜயா அவர்கள். எண்பத்தி எட்டு வயதில் ஓட்டளிக்க முதியோர் இல்லத்தில் இருந்து தனியாளாக பஸ்ஸில வந்தவர்.. வெயில் தாளாமல் மயங்கி சுருண்டு விழுந்து கிடந்தார்… எந்த காரில் எந்த நடிகர் வருவார் என ஆவலாக ஓடி திரிந்த மீடியா கால்களும், காமிரா கண்களுக்கும் இவர் தெரியவில்லை போல. ஏன் பிரச்சாரத்தில் பரபரப்பாய் இருந்த பலருக்கும் கூட தெரியவில்லை போல.

உடனடியாக இரு அணியை சேர்ந்தவர்களுக்கும் தகவல் அனுப்பியும் பதில் கிடைக்காமல் சுந்தரம் ஜயா அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து ஆசுவாசபடுத்தி அவரது விருப்பத்தின் பேரில் போரூரில் உள்ள அவரது முதியோர் விடுதியில் கொண்டு பத்திரமாக சேர்த்த போது தான் நிம்மதி வந்தது. நடிகர் சங்க தேர்ததலில் வாக்களித்துவிட்டு வரும்போதே அதே வளாகத்தில் மயக்கமுற்ற நலிந்த மூத்த கலைஞரை பத்திரமாக அவரது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு படப்பிடிப்பிற்காக மீண்டும் வேலூரை நோக்கி பயணம். நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி என வாக்குதிறுதி அளித்த அணி வெற்றி கொண்டு உண்மையாகவே உதவினால் நலம்.