மனித குரங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசி கொரோனாவைத் தடுக்கலாம்… இங்கிலாந்தில் நம்பிக்கைத் தரும் ஆராய்ச்சி!

 

மனித குரங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசி கொரோனாவைத் தடுக்கலாம்… இங்கிலாந்தில் நம்பிக்கைத் தரும் ஆராய்ச்சி!

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஹல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் தமிழர் அன்புச்செல்வன் என்பவர் பதிவிட்டதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஹல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் தமிழர் அன்புச்செல்வன் என்பவர் பதிவிட்டதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், “ChAdOx1 என்றால் சிம்பன்சி வகைக்குரங்குகளுக்கு, சளி, இருமல் உள்ளிட்ட சாதாரண நுரையீரல் தொற்றுநோய்களை உண்டாக்கக்கூடிய வைரசுத்துகள்கள் ஆகும். கொரோனா போன்ற வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் உடலிலும், அவற்றை எதிர்த்துப்போராட நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும். அதாவது, கொரோனாவின் அனைத்துப் பண்புகளையும் மனிதவுடலே அறிந்துகொண்டு, அதை அழித்தொழிக்கத் தேவையான வேதிப்பொருள்களை நம்முடைய உடலே உருவாக்கும். அப்படி உருவாகும் நோய் எதிர்ப்புப் பொருள்களை “ஆன்டிபாடீஸ்” என்று அறிவியல் வழங்குகிறது.

corona-vaccine-78

இவ்வாறு, மனிதவுடலுக்குத் தீங்கிழைக்க வரும் தீநுண்மிகளை அழிப்பதற்கென்றே உருவாகும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அதிகமாகும்போது அங்கிருக்கும் தீநுண்மிகள் தாக்குப்பிடிக்கமுடியாமல் அழிந்துபோகும்.
ஆகவே, கொரோனாத் தொற்றியவர்களின் உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்புப் பொருள்களுக்குத் தீங்கேதும் ஏற்படாத மருந்து கண்டுபிடிக்கும் வழியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பு மருந்தாக்கத் துறை வல்லுநர்கள் தேடினர்.

chimbanzee-78

சிம்பன்சிகளின் அடினாய்டு திசுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வைரஸ் மனித உடலில் தீங்கேதும் ஏற்படுத்தாது என்பதாலும், வைரஸ் தொற்றுக்கு உள்ளான மனித உடலுக்குள் ChAdOx1 செலுத்தப்படும்போது, ஏற்கெனவே உடலுக்குள் இருக்கும் தீநுண்மியான கொரோனாவை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நோய் எதிர்ப்புப் பொருள்களை எவ்விதத்திலும் சிதைத்து நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்காது என்பதாலும் இந்த தடுப்பு மருந்து கட்டாயம் மனித குலத்தைக் காப்பாற்றும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். வரும் வியாழனன்று மனிதவுடலில் செலுத்தி சோதிக்கப்படுமென்று அறிவித்திருக்கிறது பிரித்தானிய மருத்துவத்துறை. நல்லது நடக்க துறைசார் வல்லுநர்களை வாழ்த்துவோம்!! வேண்டுவோம்!!” என்று கூறியுள்ளார்.