மனித கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்: அரசின் மீது நீதி மன்றம் குற்றச்சாட்டு!

மனித கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்: அரசின் மீது நீதி மன்றம் குற்றச்சாட்டு!

மனித கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் உயிரிழப்புகள் வழக்கில், தமிழிக அரசு சாதிய பாகுபாடுகளில் மக்களை பாதுகாக்க தவறி விட்டது என உயர் நீதி மன்றம் தெரிவித்துஉள்ளது.

மனித கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் உயிரிழப்புகள் வழக்கில், தமிழிக அரசு சாதிய பாகுபாடுகளில் மக்களை பாதுகாக்க தவறி விட்டது என உயர் நீதி மன்றம் தெரிவித்துஉள்ளது. 

Manual scavenging

தமிழகத்தில் மட்டும் தான் மனித கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. எத்தனையோ தொழில்நுட்பங்கள்  வந்தாலும் இன்னும் மனித கழிவுகளை அள்ளுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதி மக்களே பயன் படுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் நிற்கதியாய் நிற்கும் குடும்பங்களின் எண்ணைக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

இது குறித்து எழுந்த வழக்குகள் இன்று உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலார்களின் பாதுகாப்புக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் படாதது ஏன் என கேள்வி எழுப்பியது. 

Manual scavenging

சாதிய பாகுபாடுகளில் அரசாங்கம் மக்களை காப்பாற்ற தவறி விட்டதாகவும், நம் நாடு சுதந்திரம்  அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த பாகுபாடு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், மக்கள் அனைவரும் சமம் என்றிருந்தாலும், அனைத்து வசதிகளும் அதிகாரிகளுக்கு கிடைத்த அளவில் சாதாரண மக்களுக்கு  கிடைத்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்  என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.