‘மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை அறிமுகம் செய்தார் நடிகர் கார்த்திக்

 

‘மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை அறிமுகம் செய்தார் நடிகர் கார்த்திக்

போராட வேண்டிய நேரத்தில் போராடி தான் ஆக வேண்டும். அதனால் தான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று  நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நெல்லை: போராட வேண்டிய நேரத்தில் போராடி தான் ஆக வேண்டும். அதனால் தான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று  நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நாடாளும் மக்கள் கட்சிக்கு பதில் மனித உரிமை காக்கும் கட்சி என புதிய பெயர் மற்றும் கட்சி கொடியை நடிகர் கார்த்திக் நெல்லையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாழ்வதற்காக அனைத்து தரப்பு மக்களும் தினம், தினம் போராட வேண்டிய நிலை தற்போது உருவாகி இருக்கிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்தான் மாறுவார்கள்.  போராட வேண்டிய நேரத்தில் போராடி தான் ஆக வேண்டும் ,அதனால் தான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன் ‘என்று கூறினார்.

karthik

மத்தியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். பெரும் பணக்காரர்கள் 65 ஆயிரம் கோடி கடன் வைத்தாலும் அதனை மீட்க அவசரம் காட்டாத அரசுகள், சிறு விவசாயிகளுக்கு 65 ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மனம் வராதது வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.