“மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை”..பொதுமக்கள் பசியாற கடை முன்பு வாழைத்தார்கள் வைத்த இளைஞர்கள்!

 

“மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை”..பொதுமக்கள் பசியாற கடை முன்பு வாழைத்தார்கள் வைத்த இளைஞர்கள்!

சாலைகள் வசிப்பவர்களும், வெளியூரில் இருந்து தமிழகம் திரும்பும் நபர்களும் பசியால் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதே போல அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பல உணவகங்கள் செயல்பட முடியாத சூழல் நிலவி வருகிறது.  இதனால், வெளிமாநிலங்களில் இருந்து வந்து இங்கு தங்கி வேலை செய்வோர், வீட்டை விட்டு வெளியே தங்கி இருப்போர், வீடுகள் இல்லாமல் வசிப்போர் உள்ளிட்ட மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகள் வசிப்பவர்களும், வெளியூரில் இருந்து தமிழகம் திரும்பும் நபர்களும் பசியால் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

ttn

இந்நிலையில், நெல்லை மாவட்டம் கொங்கந்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள், பசியால் வாடும் பொதுமக்களுக்கு உதவ முடிவெடுத்து ஒரு கடை முன்பு வாழைப்பழ தார்களை கட்டி வைத்திருக்கின்றனர். அதனை அவர்களின் சொந்த செலவில் வைத்துள்ளதாகவும், அந்த பழங்களை பொதுமக்கள் சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை உணர்த்துகிறது.