மனிதனின் மனோபாவம்! நீதி கதைகள்!

 

மனிதனின் மனோபாவம்! நீதி கதைகள்!

ஒரு சிலர் நிறைய திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனை திறமைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு சோம்பேறித்தனமும் அவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும். சோம்பேறித்தனத்தினால் வரும் வாய்ப்புகளை எல்லாம் விட்டு விடுவார்கள். இன்னும் சிலரோ லட்சக்கணக்கில் காசு, பணம் வைத்திருப்பார்கள்.

ஒரு சிலர் நிறைய திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனை திறமைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு சோம்பேறித்தனமும் அவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும். சோம்பேறித்தனத்தினால் வரும் வாய்ப்புகளை எல்லாம் விட்டு விடுவார்கள். இன்னும் சிலரோ லட்சக்கணக்கில் காசு, பணம் வைத்திருப்பார்கள். ஆனால், இலவசமாய் கிடைக்கிறது என்பதற்காக ஒரு ரூபாய் ஷாம்பூ பாக்கெட் என்றாலும் கியூவில் நிற்பார்கள். மனிதனோட சுபாவம் இப்படி தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

rich man

இதை விளக்குவதற்காக மேல்நாட்டில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றினார்கள்.
அவர்களின் திட்டப்படி ஒரு பணக்காரரை அறிவிப்பு ஒன்றை வெளியிடச் செய்தார்கள். தனது சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்குத் தான் தரத் தயாராக இருப்பதாகவும், தேவைப்படும் மக்கள் அந்நகரின் கடற்கரையில் ஒன்றுகூடுமாறும் அறிவிப்பை வெளியிட்டார் அவர். அடுத்த நாள் லட்சக்கணக்கில் மக்கள் கடற்கரையில் திரண்டனர்.  எல்லோருக்கும் மத்தியில் நின்றிருந்த அந்த கோடீஸ்வரர், என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள் என்றார்.  உடனே அனைவரும் நீ முதல்… நான் தான் முதலில் வந்தேன் என்றபடி வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். வரிசை பல கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது. இப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் கோடீஸ்வரர். அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்…. ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும் என நிபந்தனையைச் சொல்லிவிட்டு, இப்போது ஒவ்வொருவராக வாருங்கள் என்று தன்னுடைய பணப்பையை எடுத்து மேஜை மீது வைத்தார்.
முதலில் நின்றவர் “இங்கு என்ன நடக்கிறது!?”  என்று ஒதுங்கி விட்டார்.  
இரண்டாவதாக  நின்றவர் டீ குடிக்க போறேன் என்று சென்று விட்டார்.   
மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார்.
இப்படியே முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம்  பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே  கடைசியாக இணைந்து கொள்வோம் என்று  பேசிக் கொண்டார்கள்.  இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே  இல்லை… இது தான் மனிதர்களின் மனோபாவம்.