மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

தூத்துக்குடியைச் சேர்ந்த உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 55 வயது பொன்ராஜ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததில் தனது மன வளர்ச்சி குன்றிய 17 வயது மகள் கர்ப்பமுற்றதாகவும், பண வசதி மிக்க பொன் ராஜ் தனது குடும்பத்தை மிரட்டுவதால் அவரால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது மகளின் 24 வார கருவை கலைக்க அனுமதிப்பதுடன், குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

பெண்ணின் கரு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதியளித்ததுடன் டி.என்.ஏ பரிசோதனைக்காக கருவை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.

பெண்ணின் உடல்நிலை கருவை கலைக்கும் நிலையில் இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அளித்த அறிக்கையின் அடிப்படையிலே இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.