மனசுக்குள் புகுந்து கொண்ட சாத்தான்! சமுத்திரக்கனியின் திரைவாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்!

 

மனசுக்குள் புகுந்து கொண்ட சாத்தான்! சமுத்திரக்கனியின் திரைவாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்!

எத்தனையோ லட்சக்கணக்கான பேர் கோடம்பாக்கத்தின் ராட்சச கதவுகளை திறக்க முடியாமல் போராடி போராடி தங்களது கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கனவுகளை காவு கொடுக்க முடியாதவர்கள் கோடம்பாக்கத்தின் மந்திர சாவியைத் தேடி தேடி வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். சினிமாவுலகம் ஓர் மந்திரவுலகம். இப்போது ரசிகர் மன்றங்களை துவங்கி, கொடி பிடித்து, போஸ்டர் ஒட்டி, அடுத்த தலைமுறைக்கான தலைவர்களுக்கு   கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறைக்கு வேண்டுமானால் தேநீர் கோப்பைகளுடன் நன்கு பரீட்சயமான முதல்வரும், பிரதமரும் புதிய விஷயமாய் தெரியலாம். அப்படி அலுவலகத்திற்கு தேநீர் கொண்டு வந்தவரை எல்லாம் மெகா ஹிட் நடிகர்களாக்கிய ஜாம்பவான்கள் எல்லாம் கோலோச்சிய இடம் கோடம்பாக்கம். அதன் கதவுகள் திறமையும், விடாமுயற்சியும் இருந்தால் சாமான்யனுக்கு எப்படியும் திறந்து விடும்.

samuthrakani

அப்படி சினிமாவில் நுழைந்து, வெற்றியையும், புகழையும் அடைந்தவர்கள் திரும்ப ஆத்திரத்திலேயோ, அவஸ்த்தையிலேயோ நிதானத்தை இழந்து இதே சினிமாவில் குப்புற விழுந்த கதையெல்லாம் இருக்கிறது. சமீபத்திய உதாரணமாய் பிரம்மாண்ட இயக்குநரை இம்சை படுத்துகிறேன் பேர்வழி என்று தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கும் திருப்புமுனை ஏற்படுத்திக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வரும் இம்சை அரசன் வடிவேலுவைச் சொல்லலாம்.
சரி… எதற்கு இத்தனை விலாவரியா என்கிறீர்களா? விஷயத்துக்கு வருவோம்!
2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது ‘சாட்டை’ படத்தின் அடுத்த பாகமாக, ‘அடுத்த சாட்டை’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

sattai

 ‘சாட்டை’ படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, யுவா, தம்பி ராமைய்யா ஆகியோர் ‘அடுத்த சாட்டை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 11:11 புரொடக்‌ஷன்ஸ் சாபில் பிரபு திலக்கும் சமுத்திரக்கனியும் இணைந்து ‘அடுத்த சாட்டை’ படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது. ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையையும்  லிப்ரா நிறுவனம் பெற்றுள்ள நிலையில் ஒரே நாளில் ‘ஐங்கரன்’ மற்றும் ‘அடுத்த சாட்டை’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஒரே நாளில் ஒரு நிறுவனத்தின் இரு படங்கள் வெளியானால் அது இரு படத்தின் வர்த்தகத்தையும் பாதிக்கும் என்பதால் ‘அடுத்த சாட்டை’  படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தது. 

samuthitakani

இந்நிலையில் தான் இயக்குநர் சமுத்திரக்கனி அவசரத்திலோ, தொடர் வேலைகளின் அயர்ச்சியிலோ, ஆத்திரத்திலோ பரபரவென்று ஒரு காரியத்தை செய்தார். தன் ட்விட்டர் பக்கத்தில் ‘நேர்மை இல்லை’ என்று ஒரு ட்வீட்டை போட்டு வி ட்டு, அடுத்த ட்வீட்டில் ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரு. ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் ‘அடுத்த சாட்டை’  திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்’ என பதிவிட்டிருந்தார். 
லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் திரு. ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் “அடுத்த சாட்டை” திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள் கிறோம்..
இதனை தொடர்ந்து லிப்ரா நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் ‘அடுத்தசாட்டை’ திரைப்படத்திற்கும் இனி வேற எந்த தொடர்பும் இல்லை, அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்’ என்று பதிலளித்திருந்தனர்.

samuthirakani

லிப்ரா நிறுவனத்திற்கும், இயக்குநர் சமுத்திரக்கனிக்கும் இடையில் என்ன தான் பிரச்சனை என்று களத்தில் இறங்கி, கோடம்பாக்கத்தில் விசாரித்தால் கதை கதையாய் சொல்கிறார்கள். 
எல்லா வேலைகளையும் இரவு முழுக்க மனசுக்குள் புகுந்து கொண்ட சாத்தான் செய்து விட்டு கிளம்ப, அடுத்த நாள் காலையில் செல்போனை எடுத்துப் பார்த்தவரிடம் வரிசையாக, ஒரே நாள்ல எப்படிங்க ரெண்டு படத்தையும் திரைக்கு கொண்டு வர முடியும்? என்று  கேள்விகள் திரையுலகில் இருந்து வந்திருக்கிறது. ட்விட்டர் சர்ச்சைகள் எல்லாம் நினைவுக்கு வந்து பதற்றத்தை ஏற்படுத்த, அடித்து பிடித்து லிப்ரா நிறுவனத்திற்கு சென்றாராம் சமுத்திரக்கனி! அதன் பின் அன்று முழுவதும் சமாதான புறாக்களை பறக்கவிட்டும், சமுத்திரக்கனிக்கு ஆதரவாக கனி, கனியவேயில்லையாம். 
வேறு வழியில்லாமல், ஆத்திரத்தில் செய்த தவறுக்கு ஆற அமர உட்கார்ந்து வருந்துக் கொண்டிருந்த சமுத்திரக்கனி, தற்போது ‘அடுத்த சாட்டை’ படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீ வாரி பிலிம்ஸுக்கு கொடுத்திருக்கிறார். `அடுத்த சாட்டை’ படத்தின் தமிழக விநியோகத்தை ஸ்ரீ வாரி பிலிம்ஸ் கைப்பற்றியிருக்கிறது.