மந்தமாக முடிவுற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு!

மந்தமாக முடிவுற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு!

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லாமல் மந்தமான நிலையிலேயே முடிவுற்றுள்ளது. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லாமல் மந்தமான நிலையிலேயே முடிவுற்றுள்ளது. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி 5 மணிக்கு முடிவுற்றது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எம்பியாகி விட்டதால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததையடுத்து  இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.

Vote

இன்று காலையிலிருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன்  வாக்களித்தனர்.  மதியத்திற்கு பின் வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டது. இறுதியாக மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுற்றது. விக்கிரவாண்டியில் 76.41 சதவீதமும், நாங்குநேரியில் 62.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.