மத சுதந்திரம் பற்றி மோடியுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை! – அமெரிக்க அதிகாரிகள் கருத்தால் கொந்தளிப்பு

 

மத சுதந்திரம் பற்றி மோடியுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை! – அமெரிக்க அதிகாரிகள் கருத்தால் கொந்தளிப்பு

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமெரிக்கா கூறியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமெரிக்கா கூறியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் கருத்து கூறிவருகின்றனர். அவர்களை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும், அவர்கள் கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் வணிகம் செய்யக் கூடாது என்று எல்லாம் தீவிரமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிரம்ப்பை இந்தியா அழைத்துவந்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தும் மோடியை விமர்சித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு பதில் அளிக்க முடியாமல் வலதுசாரி சிந்தனையாளர்கள் வேறு வேறு விஷயங்களை பேசி வருகின்றனர்.
ஏற்கனவே கிறிஸ்தவ ட்ரம்பை அழைத்து வரும் மோடி என்று சமூக ஊடகங்களில் கிண்டல்கள் பரவிவரும் நிலையில், இந்தியா வரும் டிரம்ப் மத சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசுவார் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது அவர்களை மேலும் கொந்தளிக்க செய்துள்ளது.

Modi- trump

ட்ரம்ப் இந்திய பயணம் குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் குடியுரிமை திருத்தச் சட்டம், மதம் தொடர்பான சூழ்நிலை பற்றி ட்ரம்ப் பேசுவாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் மத சுதந்திரத்தைக் கொண்டுள்ளன இது பற்றி பொது வெளியில் ட்ரம்ப் பேசியுள்ளார். மோடியிடமும் இதுபற்றி ட்ரம்ப் பேசுவார். பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கும் அவர்கள் மத சுதந்திரம் தொடர்பாகவும் பேசுவார்கள். இந்திய ஜனநாயகம் மற்றும் அமைப்புகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. இவற்றை நிலைநிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்.

Modi- trump

மத சுதந்திரம், சிறுபான்மை மதங்களுக்கு மரியாதை அளித்தல், அனைத்து மத மக்களையும் சமமாக நடத்துவது உள்ளிட்டவை பற்றியும் மோடி பேசுவார்” என்றார்.அமெரிக்க அதிகாரியின் பேட்டி இந்தியாவில் உள்ள தீவிர வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மதம் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா எப்படி தலையிடலாம் என்று கொந்தளிப்பை சமூக ஊடகங்களில் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும் பிரதமர் மோடிக்காக இந்த விவகாரத்தில் மென்மையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.