மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்கு டைம் தேவைப்பட்டதால் லாக்டவுனை மத்திய அரசு தாமதமாக அமல்படுத்தியது….. கமல்நாத் பகீர் குற்றச்சாட்டு…

 

மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்கு டைம் தேவைப்பட்டதால் லாக்டவுனை மத்திய அரசு தாமதமாக அமல்படுத்தியது….. கமல்நாத் பகீர் குற்றச்சாட்டு…

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்கு நேரம் தேவைப்பட்டால், லாக்டவுனை மத்திய அரசு மிகவும் தாமதமாக நடைமுறைப்படுத்தியதாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் தலைவர் கமல் நாத் குற்றச்சாட்டியுள்ளார்

தொற்று நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த நோக்கில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு வேண்டும் என்றே லாக்டவுனை தாமதப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

பா.ஜ.க.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் கூறியதாவது: கடந்த பிப்ரவரி 12ம் தேதியன்று ராகுல் காந்தி கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்தார். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு 40 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 24ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு 175 மடங்கு உயர்ந்தது பிறகு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் மார்ச் 24ல் இது 536ஆக உயர்ந்தது.

லாக்டவுன்

எல்லாவற்றும் மேலாக மோடி அரசு லாக்டவுனை அமல்படுத்த மார்ச் 24ம் தேதி வரை ஏன் காத்திருந்தது? கடந்த பிப்ரவரி முதல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் பணியில் அவர்கள் (பா.ஜ.க.) ஈடுபட்டு இருந்ததுதான் அதற்கு ஒரே காரணம். கடந்த மாதம் 23ம் தேதி மத்திய பிரதேச முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவியேற்கிறார். அதற்கு அடுத்த நாள் மத்திய அரசு லாக்டவுனை அறிவிக்கிறது. மார்ச் 12ம் தேதி கொரோனா வைரஸை உலக சுகாதார அமைப்பு உலக தொற்றுநோயாக அறிவிக்கிறது. மார்ச் 14ம் தேதி மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்தது மற்றும் கல்வி நிறுவனங்கள், மால்கள் அடைக்க உத்தரவிட்டது. மேலும் அப்போது தனது அரசு கொரோனா வைரஸ் எதிரான நடவடிக்கைகளில் தயாராகி கொண்டு இருந்தது. ஆனால் பா.ஜ.க. மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எனது வீழ்ச்சிக்கு சதி செய்து கொண்டு இருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.