மத்திய பிரதேசத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக

 

மத்திய பிரதேசத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக

மத்திய பிரதேசத்தில் பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. 230 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவை கடந்தும்  இன்று காலை நிறைவடைந்தது. இறுதியாக காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளிலும், பாஜக 109 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 1 தொகுதியிலும் சுயேட்சைகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்கள் தேவை என்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே பகுஜன் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸூக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். இதன் மூலம் அம்மநிலத்தில் பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து ஆளுநர் ஆனந்தி பென் படேல். மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.