மத்திய பிரதேசத்தில் தொடர் இழுபறி; காங்கிரஸூக்கு பகுஜன் சமாஜ்வாதி ஆதரவு

 

மத்திய பிரதேசத்தில் தொடர் இழுபறி; காங்கிரஸூக்கு பகுஜன் சமாஜ்வாதி ஆதரவு

மத்திய பிரதேசத்தில் காங் – பாஜக இடையே தொடர் இழுபறி நிலவி வருவதால் பகுஜன் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

போபால்: மத்திய பிரதேசத்தில் காங் – பாஜக இடையே தொடர் இழுபறி நிலவி வருவதால் பகுஜன் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 75% பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாஜக ஆட்சி நடந்து வருவதால் காங்கிரஸ் கட்சி ம.பியில் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 110 இடங்களிலும் , பாஜக 107 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், இரு கட்சிகளும் பெரும்பான்மை பெற முடியாத சூழல் உருவாகி இருப்பதால் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை பெறும் முயற்சியில் பாஜகவும், காங்கிரஸூம் தீவிரமாக இறங்கின. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.