மத்திய பிரதேசத்தில் தினமும் 12 ஆயிரம் பிபிஇ கருவிகள் உற்பத்தி – கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு வழங்கல்

 

மத்திய பிரதேசத்தில் தினமும் 12 ஆயிரம் பிபிஇ கருவிகள் உற்பத்தி – கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு வழங்கல்

முன்னணியில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களுக்காக மத்தியப் பிரதேசம் ஒரு நாளைக்கு 12,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. அதன் தினசரி தேவை 10,000 கருவிகளுக்கு மேல் என ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னணியில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களுக்காக மத்தியப் பிரதேசம் ஒரு நாளைக்கு 12,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. அதன் தினசரி தேவை 10,000 கருவிகளுக்கு மேல் என ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, இதுவரை 1.5 லட்சம் பிபிஇ கருவிகள் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 75,000 தலா இந்தூர் மற்றும் போபாலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில தொழில்துறை மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குநர் குமார் புருஷோத்தம் தெரிவித்தார்.

ttn

மத்திய பிரதேசத்திற்கு ஒரு நாளைக்கு 10,000 பிபிஇ கிட்கள் தேவை, அதேசமயம் மாநிலம் ஒவ்வொரு நாளும் 12,000 கிட்களை உற்பத்தி செய்கிறது” என்று திரு குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் பணியாளர்களுக்கான பிபிஇ கிட்களின் உபரி இருப்பு மாநிலத்தில் உள்ளது. போபால் மற்றும் இந்தூரில் சுமார் 40,000 கிட்கள் கையிருப்பில் உள்ளன. மேலும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார்.

இந்தூரில் பிபிஇ கிட்களை வழங்க ஏராளமான நன்கொடையாளர்கள் முன்வருகிறார்கள். இந்திய மருத்துவ சங்கத்தின் அலுவலர்களுடன் ஒரு வீடியோ மாநாட்டின் போது, ​​முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநிலத்தில் பிபிஇ கிட் உற்பத்தி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஒப்புதலின் பின்னர் தொடங்கப்பட்டது என்றார்.

மக்களுக்கு நியாயமான விலையில் முககவசங்களை வழங்குவதற்கான தயாரிப்புகளையும் மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த மாநிலத்தில் பருத்தி துணி முகமூடிகளை தைக்க ஆர்வமுள்ள பெண்களை பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட முதல் நாளில் 4,200 பெண்கள் இந்த பணிக்காக தங்களை பதிவு செய்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த பெண்கள் தயாரிக்கும் முககவசங்களை தலா ரூ.11 விலைக்கு மாநில அரசு வாங்கி மக்களுக்கு நியாயமான விகிதத்தில் கிடைக்கச் செய்யும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நேற்றுவரை 2,090 கொரோனா பாதிப்புகள் மற்றும் 103 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மத்தியபிரதேசத்தில் இதுவரை 302 நோயாளிகள் கொரோனா நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.