மத்திய பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ அதிரடி நீக்கம்

மத்திய பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ அதிரடி நீக்கம்

குடியுரிமைத் சட்டத்தைச் ஆதரித்த பகுஜன் சமாஜ் பெண் எம்.எல்.ஏவை அக்கட்சி தலைவர் மாயாவதி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார்.

குடியுரிமைத் சட்டத்தைச் ஆதரித்த பகுஜன் சமாஜ் பெண் எம்.எல்.ஏவை அக்கட்சி தலைவர் மாயாவதி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார்.

மத்திய அரசு அமல் படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தாக்கப்படுவதால் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

MLA Rambai

இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் பதாரியா சட்டமன்றத் தொகுதி பெண் எம்.எல்.ஏ ரமாபாய் பரிஹார் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.  இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.