மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் | உணவு மானியம் அதிகரிக்க வாய்ப்பு!

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் | உணவு மானியம் அதிகரிக்க வாய்ப்பு!

இந்த  மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் உணவு மானியத்தை 20 சதவீதங்கள் வரையில் மத்திய அரசு உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஆளும் பாஜக அரசி, சென்ற முறை 2014-2019 வரையிலான ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை இந்த வருடம் பிப்ரவரி மாதம் 1ம் தேதியன்று தாக்கல் செய்தது. 

budjet

அந்த பட்ஜெட்டில் 2019-2020 நிதியாண்டுக்கான உணவு மானியமாக 1.84 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.  ஏற்கெனவே அவர்கள் தாக்கல் செய்திருந்த தொகையிலிருந்து, வர இருக்கும் ஜூலை மாதம் 5ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் 2.21 லட்சம் கோடிகளாக உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவருகின்றன.

இதன் எதிரொலியாக தான் ஒரே ரேஷன் கார்டு மூலமாக இந்தியா முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் வல்லுநர்கள் சொல்கிறார்கள். பொது விநியோக அமைப்பின் கீழ் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் இந்த உணவு மானியத்தின் உயர்வு இருக்கும் என்கிறார்கள்.  மேலும் உணவு மானியத்திற்குத் தேவைப்படும் கூடுதலான நிதியைத் தற்காலிக கடன் வசதி திட்டத்தின் கீழும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

budget

இந்திய வரலாற்றில் நிதித்துறையை கவனித்த முதல் பெண்மணி இந்திரா காந்தி என்றாலும், முழு நேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே முதல் முறையாக இருப்பதால், அவர் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வருமான வரி தள்ளுபடி என்று பல அறிவிப்புகல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறை கூடுதல் சலுகைகளையும் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்