மத்திய பட்ஜெட்டில் உள்நோக்கம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

மத்திய பட்ஜெட்டில் உள்நோக்கம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதையடுத்து, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்வு. மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைக்கப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும். பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. பட்ஜெட்டை ஆளுங்கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கி உள்ளன.

அந்த வகையில், மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மோடி அரசின் இடைக்கால பட்ஜெட், பட்ஜெட் அல்ல . மக்களை திசைத்திருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.