மத்திய சிறையில் போலீசார் சோதனை! சிம்கார்டுகள் பறிமுதல்!

மத்திய சிறையில் போலீசார் சோதனை! சிம்கார்டுகள் பறிமுதல்!

தமிழகம் முழுவதுமே சிறைச்சாலைகளில் கடும் காவலையும் மீறி போதைப் பொருட்களும், செல்போன்களும், சிம்கார்டுகளும் கைதிகளிடையே புழங்கி வருவதாக நீண்ட நாட்களாகவே பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் சிறைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, இப்படி சில பொருட்களை சோதனையில் கைப்பற்றுவார்கள். 

jail

அது போல்  மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைகளில், தனித் தனியாக சோதனை செய்யப்பட்டது. மதுரை மத்திய சிறையில், அதிகளவில் தடை செய்யப்பட்ட பொருட்களும் செல்போன்களும் கைதிகளிடையே புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இன்று காலை 5.50 மணிக்குத் தொடங்கிய சோதனை மூன்று மணி நேரம் நடைபெற்று காலை 8.45 மணி வரை தொடர்ந்தது. இந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து ஒரு செல்போன், 2 சிம்கார்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்றும்  கைப்பற்றப்பட்டது.