மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வு (CTET) ஒத்தி வைப்பு – சி.பி.எஸ்.இ அறிவிப்பு

 

மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வு (CTET) ஒத்தி வைப்பு – சி.பி.எஸ்.இ அறிவிப்பு

இந்திய அரசு நடத்திவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலையில் சேர வேண்டும் எனில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test – CTET) அவசியம் எழுத வேண்டும். இந்தத் தேர்வினை சி.பி.எஸ்.இ நடத்தும்.

மத்திய ஆசிரியர் தேர்வு 1 முதல் 5 வரையிலா வகுப்புகளின் ஆசிரியர்களுக்குப் பிரைமரி ஸ்டேஜ் என்றும் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளின் ஆசிரியர்களிக்கு எலிமின்டரி ஸ்டேஸ் என்ற் இரு பிரிவுகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வு (CTET) ஒத்தி வைப்பு – சி.பி.எஸ்.இ அறிவிப்பு

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களைக் கடந்த பிப்ரவரி 24 -ம் தேதி வரை சி.பி.எஸ்.இ பெற்றது. அதன்படி ஜூலை 5-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுக்கவே அதிகளவில் இருப்பதால் பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்ப்டுகின்றன. அதன்படி, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகச் சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா சூழலால் இத்தேர்வு ஒத்தி வைக்கபடுவதாகவும், மீண்டும் தேர்வு எப்போது நடத்தப்படும் உள்ளிட்ட செய்திகளை https://ctet.nic.in/ எனும் இணையத்தளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளும்பட்டி அறிவுறுத்தியுள்ளது.

மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வு (CTET) ஒத்தி வைப்பு – சி.பி.எஸ்.இ அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நீட் தேர்வு ஆகியவை இந்தியா முழுக்க உள்ளவர்களால் எழுதப்படுவதால், கொரோனாவின் தாக்கம் இந்தியா முழுவதும் தணிந்த பிறகே நடத்தும் சூழல் வரும் எனக் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.