மத்திய அரசை பொத்திப் பாதுகாக்காதீர்கள்: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

மத்திய அரசை பொத்திப் பாதுகாக்காதீர்கள்: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசும், அ.தி.மு.க எம்.பிக்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கஜா புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசும், அ.தி.மு.க எம்.பிக்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உயிர் வாழ, வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலையை அ.தி.மு.க அரசு உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

mk stalin

மத்திய குழு முதலமைச்சரை சந்தித்துச் சென்று 25 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பரிந்துரைகளை கொடுக்கவில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், நிவாரண நிதியைப் பெற முதலமைச்சர் மத்திய அரசுக்கோ பிரதமருக்கோ அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், அ.தி.மு.க எம்.பி.க்கள், கஜா புயல் குறித்த விவாதத்தின் போது அவையில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆங்காங்கே அனைத்துக்கட்சிக் குழுக்கள் அமைத்து அவர்கள் முன்னிலையில், நிவாரணம் வழங்கவும், பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் விவசாய மற்றும் கல்விக் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.