மத்திய அரசை கவிழ்க்க நக்சலைட்டுகள் சதி திட்டம்: ராஜ்நாத் சிங் பகீர் குற்றச்சாட்டு

 

மத்திய அரசை கவிழ்க்க நக்சலைட்டுகள் சதி திட்டம்: ராஜ்நாத் சிங் பகீர் குற்றச்சாட்டு

டெல்லி: மத்திய அரசை கவிழ்க்க நக்சலைட்டுகள் சதி திட்டம் தீட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மகராஷ்ரா மாநிலம் புனே கோரேகான் பகுதியில் கடந்த ஜனவரியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட  வன்முறை தொடர்பாக கவிஞர் வராவரராவ் உள்ளிட்ட 5 பேரை கைது போலீசார் செய்தனர். இந்த கைது நடவடிக்கையை ஏற்காத உச்சநீதிமன்றம் அவர்களை 6ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.

இதனை ஆதரித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்ஜ்னதாஹ் சிங், நக்சலைட்டுகள் காடுகளிலும் மலைகளிலும் மறைந்து பதுங்கி வாழ்ந்து வந்தனர், ஆனால் இப்போது நகரங்களில் சகல வசதிகளுடன் உலா வருகின்றனர். இந்தியாவில் 126 மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்தது என்றும், தற்போது 12 மாவட்டங்களாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், கவிஞர் வராவரராவ் உள்ளிட்ட 5 பேரின் கைது நடவடிக்கை சரியானது எனக் கூறிய ராஜ்நாத் சிங், நக்சலைட்டுகள் சதி திட்டம் தீட்டி, நாட்டில் வன்முறைகளை ஏற்படுத்தி மத்திய அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.