மத்திய அரசு பணிய வேண்டும்… இல்லை என்றால் பணிய வைக்கப்படுவீர்கள்! – ஜவாஹிருல்லா பேச்சு

 

மத்திய அரசு பணிய வேண்டும்… இல்லை என்றால் பணிய வைக்கப்படுவீர்கள்! – ஜவாஹிருல்லா பேச்சு

திருவாரூர் மாவட்டம் அடியமங்கலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றுப் பேசினார்.

சிஏஏ போராட்டத்திற்கு மத்திய அரசு பணிய வேண்டும்,இல்லாவிட்டால் பணிய வைக்கப்படுவார்கள் என்று ஜவாஹிருல்லா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அடியமங்கலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றுப் பேசினார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

Jawahirullah

“தமிழ்நாடு அரசானது தேசிய மக்கள் பதிவேடு,தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதைத் தமிழக அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும்.அவ்வாறு வெளியிடும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும்.
ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அரசு ஒரு பாசிச அரசாகவே இருக்கும். பாசிச அரசு வென்றதாக சரித்திரம் இல்லை. பாசிச உணர்வாளராக இருந்த ஹிட்லர் அழிந்துபோனார். 
மக்களாட்சித் தத்துவத்தின் கீழ் இயங்கக் கூடிய அரசாக மத்திய அரசு இருந்தால், ஜனநாயக போராட்டத்திற்குப் பணிய வேண்டும்.இல்லை என்றால் பணிய வைக்கப்படுவார்கள்” என்றார்.