மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது: அமைச்சர் தங்கமணி

 

மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது: அமைச்சர் தங்கமணி

கஜா புயல் பாதிப்பிற்காக முதற்கட்டமாக ரூ 1500 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய அரசு ரூ 200 கோடி ஒதுக்கியுள்ளது என மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னை: கஜா புயல் பாதிப்பிற்காக முதற்கட்டமாக ரூ 1500 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய அரசு ரூ 200 கோடி ஒதுக்கியுள்ளது என மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தி சென்றுள்ளது. 20 வருடங்களுக்கு பின்னோக்கி வாழ்வாதாரம் சென்றுள்ளதால் இந்த இழப்பில் இருந்து எப்படி மீள போகிறோம் என மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி கஜா புயல் நிவாரண நிதிக்கு மத்திய அரசு ரூ 15,000 கோடி ஒதுக்க வேண்டும் எனவும், முதற்கட்டமாக ரூ 1,500 கோடி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு முதற்கட்டாக மின் சீரமைப்பு பணிக்காக ரூ 200கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.