மத்திய அரசு தமிழைப் புறக்கணிக்கவில்லை: ஒ.பன்னீர் செல்வம்…

 

மத்திய அரசு தமிழைப் புறக்கணிக்கவில்லை: ஒ.பன்னீர் செல்வம்…

தமிழக அரசின் துணைக்கோள் திட்டத்தின் படி 20 ஏக்கரில் பேருந்து நிலையமும், 12 ஏக்கரில் வணிக வளாகமும், 122 ஏக்கரில் துணைக்கோள் திட்டப் பணிகளும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் தொடங்கவுள்ள தமிழக அரசின் துணைக்கோள் திட்டத்தின் முதற்கட்ட ஆய்வினை பார்வையிட்ட தமிழக துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், தமிழைப் புறக்கணிக்கும் எந்த செயல்களிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

OPS

மேலும், தமிழக அரசின் துணைக்கோள் திட்டத்தின் படி 20 ஏக்கரில் பேருந்து நிலையமும், 12 ஏக்கரில் வணிக வளாகமும், 122 ஏக்கரில் துணைக்கோள் திட்டப் பணிகளும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா சபையில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற 3000 ஆண்டுகள் பழமையான புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். இதற்காகப் பல தலைவர்கள் பிரதமரைப் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.