மத்திய அரசு தந்த 3600 கோடியை திருப்பித் தந்த எடப்பாடி அரசு!

 

மத்திய அரசு தந்த 3600 கோடியை திருப்பித் தந்த எடப்பாடி அரசு!

பயனாளிகளை அடையாளம் காண்பதில் சுணக்கம், முறையான திட்டமில்லாமல் கால விரயம் செய்தது, பாதியில் கைவிடப்பட்ட வேலைகள் என பல்வேறு காரணங்களால் திட்டங்களில் தொய்வு ஏற்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டு இவ்வளவு பெரிய தொகை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களுக்காக தமிழகத்துக்கு 2017-18ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ஒதுக்கிய 5,920 கோடியில் பெரும்பகுதியை பயன்படுத்தாமல்,  தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. பயன்படுத்திய தொகை 2,243, திருப்பியளித்த தொகை 3,676 கோடி. பயனாளிகளை அடையாளம் காண்பதில் சுணக்கம், முறையான திட்டமில்லாமல் கால விரயம் செய்தது, பாதியில் கைவிடப்பட்ட வேலைகள் என பல்வேறு காரணங்களால் திட்டங்களில் தொய்வு ஏற்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டு இவ்வளவு பெரிய தொகை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

TN returns 62% funds

 

வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட 3,082 கோடியில் 728 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு, 2354 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் திருப்பி அனுப்பப்பட்ட தொகை 247 கோடி, பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 23 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டதில் 97 கோடி ரூபாயையும் தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது.