மத்திய அரசு அலுவலகங்களின் பலகைகளிலிருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு!

மத்திய அரசு அலுவலகங்களின் பலகைகளிலிருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு!

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள், ஒரேநேரத்தில் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள், ஒரேநேரத்தில் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு இந்தி மொழியை தமிழ்நாட்டில் 3 வது மொழியாக கற்பிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர். இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மத்திய அரசு இந்த கொள்கை அறிவிப்பை திரும்பி பெற்றது. இந்தி கற்பது கட்டாயமில்லை என்றும், வெறும் பரிந்துரைதான் என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில் திருச்சி பி.எஸ்.என்.எல். தலைமை தொலைத்தொடர்பு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலைய பெயர் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகள், கருப்பு மையால் அழிக்கப்பட்டு உள்ளன.விமானநிலையத்தின் நுழைவு வாயில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளும் அழிக்கப்பட்டுள்ளது.இந்தி எழுத்துகளை அழித்த மர்ம நபர்கள் யார்? என விசாரித்து வரும் காவல்துறையினர், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.