மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது: திருமா – சீமான் கடும் தாக்கு!

 

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது: திருமா – சீமான் கடும் தாக்கு!

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது: திருமா – சீமான் கடும் தாக்கு!

சென்னை: மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது  என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

modi

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதியுள்ள ஆவண புத்தகம், நேற்று  வெளியிடப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தைத் திறம்படக் கையாண்டது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்; இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்’  என்றார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து  பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் என்று ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவரிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, ரஜினி கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லலை’ என்றார். இதே போல்  சீமானோ, ‘ நீங்கள் அவதாரங்களாக அப்புறம் இருங்கள். முதலில் நல்ல மனிதர்களாக இருங்கள்’என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.