மத்திய அரசுக்கு எதிராக போராட ஸ்டாலின் தயங்குகிறார்: தம்பிதுரை விமர்சனம்

 

மத்திய அரசுக்கு எதிராக போராட ஸ்டாலின் தயங்குகிறார்: தம்பிதுரை விமர்சனம்

திருச்சி: மத்திய அரசுக்கு எதிராக போராட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட தயங்குகிறார் அதிமுக எம்.பி தம்பிதுரை விமர்சனம் செய்துள்ளார்.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் அண்மையில் பாரத் பந்த் எனப்படும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் அழைப்பு விடுத்த இந்த போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

இந்நிலையில், அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளர், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பொறுத்தவரை அரசின் முடிவை ஆளுநர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய பாரத் பந்தில் திமுக பங்கேற்றும் அந்த போராட்டம் பிசுபிசுத்து போனது. அதற்கு காரணம் மத்திய அரசை எதிர்த்து போராட மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் என்றார்.