மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்

 

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டுள்ளார்

டெல்லி: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்விந்த் சுப்பிரமணியன் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இதையடுத்து, அவரது பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நீடிக்கப்பட்ட பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், கடந்த ஜூன் மாதம் அர்விந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்தார். இந்த தகவலை தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சொந்த காரணங்களுக்காக அர்விந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாகவும், அவரது ராஜினாமாவை ஏற்பதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை நியமனம் செய்ய, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  IIT-IIM மாணவரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, ஹைதராபாத்தில் உள்ள Indian School of Business-ல் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.