மத்திய அரசின் உதவித் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிதான்! – ப.சிதம்பரம் கணக்கு

 

மத்திய அரசின் உதவித் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிதான்! – ப.சிதம்பரம் கணக்கு

மத்திய அரசு அறிவித்துள்ள 1.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கும் பலனின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிதான் என்று ப.சிதம்பரம் கணக்கிட்டுள்ளார். ஆனால் அந்த அறிவிப்புகள் போதுமானது இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. தலைக்கு கணக்கிட்டால் ரூ.200கூட தாண்டாது, இதை வைத்து அடுத்த மூன்று மாதங்களை எப்படி சமாளிப்பது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிவாரண திட்டத்தின் மதிப்பீடு தொடர்பாக கணக்கு ஒன்றை ட்டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணத் திட்டத்தை அறிவித்தார். 

மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ரூ 1.70,000 கோடி அல்ல. இத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவிருக்கும பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ 1.00,000 கோடி தான்.

மத்திய அரசின் திட்டத்தில்  கீழ்க்கண்ட பிரிவு மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது… குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், வேலை உறுதி திட்டத்தில் வேலை இல்லாதவர்கள், ஜன்தன் திட்டத்தில் கணக்கு உள்ள ஆண்கள், லே ஆஃப் செய்யப்பட்ட தொழிலாளர்கள், இன்னும் பலர்” என்று கூறியுள்ளார்.