‘மத்திய அரசின் அத்துமீறல்களை ரஜினி பாராட்டுவது வேதனையளிக்கிறது’ : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

 

‘மத்திய அரசின் அத்துமீறல்களை ரஜினி பாராட்டுவது வேதனையளிக்கிறது’ :  கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அத்துமீறல்களைக் கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவளித்துப் பேசிவருகிறார் நடிகர் ரஜினி

‘மத்திய அரசின் அத்துமீறல்களை ரஜினி பாராட்டுவது வேதனையளிக்கிறது’ :  கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை: மத்திய அரசின் அத்துமீறல்களை ரஜினிகாந்த் ஆதரிப்பது வேதனையளிக்கிறது என்று  சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளனர். திட்டபமிட்டு செயல்படுத்திய விதம் கிருஷ்ணா, அர்ஜுனரை போல் இருந்தது என்று ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளினார். இதற்கு தமிழகத்தில்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ‘கஜா புயல் பாதிப்பின்  போது  ஆய்வு செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரங்களை இழந்து வாடும் விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகள் அளிக்கப்படும் என்றார். ஆனால் தற்போது நிதியமைச்சராகியுள்ள அவர், தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்  கஜா  புயல் நிவாரணம் குறித்த ஏதும் அறிவிக்கவில்லை. இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற  மத்திய அரசின் அத்துமீறல்களைக் கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவளித்துப் பேசிவருகிறார் நடிகர் ரஜினி. இது வேதனையை அளிக்கிறது. அவரது பேச்சிலிருந்தே அரசியலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெளிவாகிறது’ என்றார். 

rajini

தொடர்ந்து பேசிய அவர், யூனியன் பிரதேசமாக லடாக்கை  அறிவித்தது  வரவேற்கத்தக்கது. இருந்தாலும்   சிறப்பு அந்தஸ்திலிருந்த அதன் மதிப்பைக்  குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கப்படும் ‘ என்றார்.