மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனா நோயாளிகளுடன் படுத்துக் கொள்வாரா? – கே.எஸ்.அழகிரி கேள்வி

 

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனா நோயாளிகளுடன் படுத்துக் கொள்வாரா? – கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஜூம் ஆப் மூலம் வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஜூம் ஆப் மூலம் வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஜூம் ஆப் மூலம் வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்கள் கொரோனா தொற்றுநோயுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். அப்படியென்றால் அவர் கொரோனா நோயாளிகளுடன் படுத்து கொள்ள தயாரா?

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்வதற்கான பயண செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் என்று சோனியா காந்தி அறிவித்தார்.

ttn

அவர் அப்படி அறிவித்த 15 நிமிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி ரூ.1 கோடி நிதியை அறிவித்துஅதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பினோம். ஆனால் தமிழக அரசிடம் இருந்து அதற்கான எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து தலைமை செயலருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். அதற்கு அவர் பதில் அனுப்பினார்.

உங்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை. தமிழக அரசிடம் உள்ள பணத்தை வைத்தே நாங்கள் சமாளித்து கொள்வோம் என்று பொருள்படும் வகையில் அந்த பதில் இருந்தது. கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. மதுக்கடைகளை திறந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்கும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன்” என்றார்.