மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்

 

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

போபால்: மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அதன்படி, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட் மற்றும் துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் கல்யாண் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் பிரதாமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அம்மாநில தலைநகர் போபாலில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் பிரதாமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்  சவுகான்,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் 9 முறை எம்.பி.,-யாகவும் மத்திய தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 72 வயதாகும் கமல்நாத் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.