மது விலை உயர்ந்ததால் அரசுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் : அமைச்சர் தங்க மணி

 

மது விலை உயர்ந்ததால் அரசுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் : அமைச்சர் தங்க மணி

கடந்த 2017 ஆம் ஆண்டு மது பாட்டில்களின் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் மீண்டும் மது விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது மது பிரியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மதுவிற்பனையை அரசே டாஸ்மாக் என்ற பேரில் நடத்தி வருகிறது. தமிழகம் உள்ள 5,300 மதுக் கடைகளின் மூலம் மூலம் ஆண்டொன்றுக்கு 26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. அரசின் பல முக்கிய திட்டங்களுக்கு இந்த வருவாய் தான் செலவிடப் படுகிறது. விழாக் காலங்களின் போது மதுவிலை உயர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும். கடந்த 2017 ஆம் ஆண்டு மது பாட்டில்களின் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் மீண்டும் மது விலை உயர்வு  அமலுக்கு வந்துள்ளது. இது மது பிரியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இது குறித்து நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ‘இந்த ஆண்டு மின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் மின் தட்டுப்பாடு இந்த முறை ஏற்படாது. 21% ஆக இருந்த மின் இழப்பு இப்போது 15% ஆகக் குறைந்துள்ளது’ என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மது விற்பனை பற்றி பேசிய அவர், ‘ஆண்டொன்றுக்கு மது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கோடி ரூபாய் செலவாகிறது. அதனால் இந்த மது விலை உயர்வு மூலம் ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.  மேலும் பழங்குடி இன மாணவனைத் தனது காலணியைக் கழற்ற சொல்லியதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்து விட்டதால் அதனை இன்னும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஒரு சிலர் அரசியல் காரணங்களால் அவரை விமர்சித்து வருகின்றனர்.