மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் தேசிய ஹெல்ப்லைனை அழைப்பது 200 சதவீதம் அதிகரிப்பு

 

மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் தேசிய ஹெல்ப்லைனை அழைப்பது 200 சதவீதம் அதிகரிப்பு

லாக்டவுன் காலத்தில் மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் தேசிய ஹெல்ப்லைனை அழைப்பது 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொரு நாளும்  மது மற்றும் போதைமருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரும் துன்பகரமான நாளாக மாறி வருகிறது. மது, போதைமருந்து மற்றும் புகையிலை கிடைக்காததால் அமைதியின்மை, பதட்ட உணர்வுகளுடன் காணப்படுகின்றன. இது மது மற்றும் போதை மருந்துபழக்கத்துக்கு அடிமையானவர்கள் தேசிய உதவி எண்ணுக்கு போன் செய்ய தூண்டுகிறது. பெரும்பாலான அழைப்பாளர்கள் இந்த பழக்கத்தை கைவிடுவது தொடர்பான ஆலோசனைகளை கேட்கின்றனர். அதேசமயம் சிலர் போதைபொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்றும் கேட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய உதவி எண்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய உதவி எண்ணுக்கு வந்த அழைப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை திரட்டியுள்ளது. அந்த புள்ளிவிவரங்களில் உள்ள தகவல்களை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக உள்ளது. கடந்த மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை  கட்டணமில்லாத தேசிய ஹெல்ப்லைன் 1800110031க்கு தினமும் சராசரியாக 90 அழைப்புகள் மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துபவர்களிடமிருந்து வந்தது. 

போதை மருந்து பயன்படுத்துபவர்

லாக்டவுன் அமலுக்கு வந்த பிறகு மார்ச் இறுதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை தினமும் சராசரியாக 266 அழைப்புகள் வந்தது. இது 200 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினமும் 236 அழைப்புகள் வந்தது. ஏப்ரல் 13 முதல் 23ம் தேதி வரை தினமும் சராசரியாக 159 அழைப்புகள் வந்துள்ளன. கடந்த மார்ச் 22 முதல் ஏப்ரல் 21ம் தேதி வரையிலான காலத்தில் தேசிய ஹெல்ப்லைனுக்கு அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.