மது, புகையிலை பொருட்களுக்குத் தடை… மாஸ்க் கட்டாயம்! – நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மது, புகையிலை பொருட்களுக்குத் தடை… மாஸ்க் கட்டாயம்! – நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களில் பேரிடர் எதிர்கொள்ளும்போது செய்ய வேண்டியவை பற்றி தனியாக குறிப்பிட்டுள்ளது.
இதன் படி, “பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும்போதும், வேலை செய்யும் இடத்திலும் முகமூடி (மாஸ்க்) அணிந்திருப்பது கட்டாயமாகும். 

பொது இடங்களில், வேலை செய்யும் இடங்களில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களில் பேரிடர் எதிர்கொள்ளும்போது செய்ய வேண்டியவை பற்றி தனியாக குறிப்பிட்டுள்ளது.
இதன் படி, “பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும்போதும், வேலை செய்யும் இடத்திலும் முகமூடி (மாஸ்க்) அணிந்திருப்பது கட்டாயமாகும். 
பொது இடம், வேலை செய்யும் இடம் மற்றும் போக்குவரத்து பொறுப்பாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.

people-wearing-mask-89

எந்த ஒரு நிறுவனமும், நிர்வாகமும் பொது இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவதை அனுமதிக்கக் கூடாது.
மாவட்ட மாஜிஸ்திரேட் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்டவைகளுக்கு செல்லலாம்.
பொது இடங்களில் எச்சில் துப்புவது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
மது, குட்கா, புகையிலைப் பொருட்களுக்குத் தீவிர தடை விதிக்கப்படுகிறது. 
வேலை செய்யும் இடங்களில் உடலின் வெப்பநிலையை பரிசோதிக்கும் வசதிகள், சானிடைசர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

tn-wine-shop

இரண்டு ஷிப்டுகளுக்கு இடையே குறைந்தது ஒரு மணி நேர இடைவெளி வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெற்றோருடன் வசிப்பவர்கள், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது வை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஷிப்ட் இடைவெளியில் அந்த தளத்தை முழுவதுமாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
மிகப்பெரிய கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.