மது பாட்டில்காளை வீடுகளிலேயே டெலிவரி செய்ய மதுபான கடை உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்!

 

மது பாட்டில்காளை வீடுகளிலேயே டெலிவரி செய்ய மதுபான கடை உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்!

மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது. 

ttn

அதுமட்டுமில்லாமல் மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மது கடைகள் திறக்கப்படுமா.. திறக்கப் படாதா என்று பல குழப்பங்கள் எழுந்து  வருகின்றன. மது கடைகள் இல்லாததால் குடிமகன்கள் மட்டுமில்லாது அரசு மற்றும் பார்கள் நடத்தி வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்பதற்காக தான் இந்த மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

ttn

இந்நிலையில், பெங்களூரு மதுபான கடை உரிமையாளர்கள் சங்கம் கர்நாடக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், வாடிக்கையாளர்கள் கேட்பதன் பொருட்டு அவர்களின் வீட்டு வாசல்களில் மதுபானங்களை வழங்குகிறோம் என்றும் இந்த விநியோக சேவையை அனுமதிக்குமாறும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.