‘மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகத்தை மாற்றியமைத்தது தமிழக அரசு!

 

‘மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகத்தை மாற்றியமைத்தது தமிழக அரசு!

தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் மதுக்கடைகள் தான். பள்ளிகளின் அருகிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் டாஸ்மாக்குக்கு பஞ்சம் இல்லை.

தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் மதுக்கடைகள் தான். பள்ளிகளின் அருகிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் டாஸ்மாக்குக்கு பஞ்சம் இல்லை. அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சகஜமாக மது அருந்தி வருகின்றனர்.கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, தினமும் 336 பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகளில் 40% மதுப் பழக்கத்தினாலும், போதை பொருட்களினாலும் நிகழ்கிறதாம். 

ttn

1937ம் ஆண்டு முதல், மது பாட்டில்களில் ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகம் தான் அச்சிடப்பட்டு வருகிறது. அப்படி அச்சிடப்பட்டு மட்டும் என்ன உபயோகம் என்று பலரின் மனத்திலும்  கேள்வி எழத்தான் செய்கிறது. இந்நிலையில் அந்த வாசகத்தை மாற்றி, ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’  என்று போடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ttn

இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, மதுவால் நாட்டின் கல்லா அதிகமாகக் கட்டுகிறது , அது எப்படி கேடாகும் என்றும் உயிருக்கு மட்டும் தான் கேடு என்றும் அரசுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் தான் மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. என்ன இருந்தாலும், அந்த காலத்தில் எழுதிய வாசகம் சரி தான். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தான்.