மது கிடைக்காததால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை.. கிராம மக்கள் அந்த தண்ணீரையே குடித்து வந்ததால் பரபரப்பு!

 

மது கிடைக்காததால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை.. கிராம மக்கள் அந்த தண்ணீரையே குடித்து வந்ததால் பரபரப்பு!

குடிபோதைக்கு அடிமையாகி இருந்ததால், அவர் மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் நகரில் வசித்து வந்த அரவிந்த் (23) என்பவர் குடிபோதைக்கு அடிமையாகி இருந்ததால், அவர் மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார். அங்கிருந்து சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பிய அவர், மதுகடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் கடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி மது கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அரவிந்த், கமுதி அருகே உள்ள அய்யன் கோவில் பட்டி குடிநீர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ttn

ஆனால் அதனை அறியாத ஊர்மக்கள் கடந்த இரண்டு நாட்களாக அந்த கிணற்றின் தண்ணீரை குடித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை அரவிந்தின் சடலம் கிணற்றில் மிதந்திருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அரவிந்த் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

அரவிந்த் இறந்ததை அறியாமல் அந்த கிராம மக்கள் அந்த குடிநீரை பயன்படுத்தி வந்ததால், தங்களுக்கு உடல்நலக்குறைபாடு வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த தண்ணீரை பரிசோதித்து மக்களுக்கு உரிய தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.