மதுவை பரிந்துரைத்தால் டாக்டர் லைசன்ஸ் ரத்து! – இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை

மதுவை பரிந்துரைத்தால் டாக்டர் லைசன்ஸ் ரத்து! – இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை

கேரளாவில் மது குடிக்காமல் அவதியுறுபவர்களுக்கு மருத்துவர்களே மதுவை பரிந்துரைப்பதான வெளியான தகவலை அடுத்து அப்படி பரிந்துரை செய்தால் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்தள்ளது.

aiims

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடி மகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். கேரளாவில் மது இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நடந்தது. இந்த நிலையில் மது இன்மை காரணமாக மிக மோசமாக மாறிய நோயாளிகள் சிலருக்கு மதுவை அளிக்கும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இது நாடு முழுவதும் வைரல் ஆனது.
இந்த நிலையில் இது குறித்து இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மது குடிக்காததால் அவதிப்படுபவர்களுக்கு அறிவியல்பூர்வமாக தான் மருத்துவ சிகிச்சை தரவேண்டும்.

doctors-writing

 மருத்துவமனையில் வைத்தோ அல்லது வீட்டில் வைத்தோ அப்படிப்பட்ட சிகிச்சையை தரலாம். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக ஏற்புடையது அல்ல என்பதால் மருத்துவர்கள் பரிந்துரை செய்யக்கூடாது.  அப்படி யாராவது பரிந்துரை செய்தால் அவர்களின் மருத்துவ தொழில் சான்றிதழ் ரத்து செய்யப்படும். இது குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் கேரள பிரிவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.