மதுவுக்காக மனைவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் !

 

மதுவுக்காக மனைவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் !

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மதுவுக்காக வீதியில் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுப்பிரச்னை நாட்டில் பெரும் பிரச்சனையாக உள்ளது. பூரண மது விலக்கு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தினந்தோறும் பல பிரச்சனைகள் இதனால் நடக்கின்றன. மதுக்கடைகளை மூடினால் குடிமகன்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைப் பலமுறை கேட்டிருப்போம். ஆனால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மதுவுக்காக வீதியில் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக கேன்டீன் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த கேன்டீனில்  வீட்டிற்கு தேவையான பொருட்கள், மதுபானம் உள்ளிட்டவை சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்தது. இதனை சுமார் 4,000 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த நிலையில், சட்ட விரோதமாக மது பானங்கள் விற்கப் படுவதால் அந்த கடை சமீபத்தில் மூடப் பட்டுள்ளது. இது குறித்து  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில்,  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மதுபானங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூறி நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களின் மனைவிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.