“மதுவின் பிடியில்… இலவசங்கள் போதையில்…” வைகோவின் பொங்கல் வாழ்த்து உறுதி!

 

“மதுவின் பிடியில்… இலவசங்கள் போதையில்…” வைகோவின் பொங்கல் வாழ்த்து உறுதி!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பெருமழையும், சில பகுதிகளில் வறட்சியுமாகக் கழிந்தது. கையில் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து, கடன் வாங்கிய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.

ttn

பல இடங்களில் காப்பீட்டுத் தொகைக்குப் பிரிமியம் கட்டியும், காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. மதுவின் பிடியிலும் இலவசங்களின் போதையிலும் தமிழ்நாட்டின் இளைய தலைமுறை பாழாகிவருகிறது.
நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். புதுவாழ்வு தர வேண்டும். எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம். தமிழ்நாட்டு மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் கூறியுள்ளார்.

வைரமுத்து வெளியிட்டள்ள ட்வீட் வாழ்த்தில், “மண் – விண் – மனிதர் – விலங்கு  நான்கையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது தமிழர் திருநாள். இது நம் பெருமிதம்; அனைத்து மதம் கடந்த ஆதி அடையாளம். கூடிக் கொண்டாடுங்கள் தமிழர்களே! வள்ளுவரையும் அழைத்துக் கொள்ளுங்கள் – வாழ்வதற்கும்;  வாழ்த்துவதற்கும்” என்று கூறியுள்ளார்.